சீனர்களுக்கு ஆமைகளை விற்று வந்த இருவருக்கு அபராதம் 

Published By: MD.Lucias

07 Jun, 2016 | 04:40 PM
image

சீன நாட்டு உணவகங்கள் மற்றும் சீன நாட்டவர்களுக்கு அதிக விலைக்கு பால் ஆமைகளைப் பிடித்து விற்று வந்த இருவருக்கு 80 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த ஆனமடு நீதிமன்ற நீதவான், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட உயிருடன் இருந்த பால் ஆமையினை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும், உயிரிழந்த நிலையில் இருந்த பால் ஆமையினை அழித்து விடுமாறும் ஆனமடு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

ஆனமடு பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினரால் ஆனமடு மெருங்கொடை பிரதேசத்தில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இவர்களிடமிருந்து ஐந்து கிலோவுக்கும் அதிக எடையுள்ள இரண்டு பால் ஆமைகள் கைப்பற்றப்பட்டதோடு  அதில் ஒன்று  தலையில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஆனமடு மெருங்கொடை எனும் பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தலா நாற்பதாயிரும் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர்கள் பால் ஆமைகளைப் பிடித்து சீன உணவகங்கள் மற்றும் நுரைச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் சீன நாட்டவர்களுக்கு ஒரு பால் ஆமையினை சுமார் எட்டாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆனமடு பொலிஸ் நிலையத்தில் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்துநில் பண்டார ஏகநாயக்கா தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களே இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  நீதிமன்ற உத்திரவின் பின்னர் உயிருடன் இருந்து பால் ஆமை நவகத்தேகம  வன விலங்கு அலுவலக வன உதவியாளர் எச். ஏ. சந்திரசிரி உள்ளிட்ட அதிகாரிகளினால் தப்போவ வனப்பகுதியில் அமைந்துள்ள நீர்த் தேக்கத்தினுள் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10