அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இருந்து வரும் புகை பசுபிக் முழுவதம் பரவியுள்ள நிலையில் தென் அமெரிக்காவை நோக்கி நகர்வதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச வானிலை அறிவிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த புகை மண்டலம் அந்தார்டிக்காவை அடைந்திருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவுஸ்திரேலிய தீ விபத்து தொடர்பான நாசாவின் செய்மதி தகவல்களை பயன்படுத்தி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய முப்பரிமாண புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் அவுஸ்திரேலியாவின் 10.3 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. அத்துடன் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் மில்லியன் கணக்கான விலங்குகளும் பலியாகியுள்ளது.

மேலும் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இந் நிலையில் இந்த விபத்துக்களினால் உண்டான சேத விபரங்களை நிவர்த்தி செய்ய எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.