பொலிஸ் நிலையங்களுக்கு வெற்றிடமாகக் காணப்படும் பகுதிகளிற்குப் பதவிகள் வழங்கப்பட்டு வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய காமினி திஸாநாயக்க  போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவியுயர்வு  பெற்று இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அசோக பிரியந்த கடந்த மாதம் குருணாகல் பகுதிக்கு இடம்மாற்றம் பெற்றுச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.