சி.ஐ.டி. எனபப்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் இன்று தடை விதித்தது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா முன்வைத்த கோரிக்கையை ஏற்று, நுகேகொட மேலதிக நீதிவான் எச்.யு.கே. பெல்பொல இந்த வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய உரையாடல் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே அவருக்கு நுகேகொட  நீதிமன்றம் வெளிநாடு செல்ல பயணத்தடை விதித்துள்ளது.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.