(செ.தேன்மொழி)
நல்லாட்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் தற்போதே தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இறுவட்டுகளில் பதிவாகியுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தினால் நாட்டில் சுதந்திரமாக இயங்க வேண்டிய சட்டத்துறையில் எவ்வளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்பது உறுதியாகும்.
நல்லாட்சி என்று கூறிக்கொண்டு செயற்பட்டவர்கள் நாட்டுக்கு எந்தவித நன்மையுமே செய்யவில்லை என்று உறுதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதற்காக தீர்மானித்திருந்தது.
இது சரியான தீர்மானம் என்பதே எமது நிலைப்பாடு. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது செயற்குழு ஒன்றிணைந்தே இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது. அதற்கமைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் வெற்றிக்காக நாங்களும் பெரும் பங்காற்றியிருந்தோம். எங்களது தீர்மானத்தை எமது ஆதரவாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சரியான தருணத்தில் நாங்கள் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளோம் என்றே எமக்கு தோன்றுகின்றது.
கடந்த அரசாங்கமே மீண்டும் ஆட்சி அமைத்திருந்தால் நாடு பெரும் பாதிப்புகளை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். கடந்த காலங்களில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டிருந்த சவால்கள் தொடர்பில் நீங்கள் நன்கு அறிவீர்கள். தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லாட்சி என்று கூறிக்கொண்டு செயற்பட்டவர்கள் நாட்டுக்கு எத்தகைய நல்ல செயல்களையும் முன்னெடுக்க வில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கம்பெரலிய மற்றும் பெருந்தெருக்கள் வேலைத்திட்டங்களுக்காக பெருந்தொகையான நிதி செலவீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அப்போது சேவையில் ஈடுபட்ட ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகள் கூட நல்லாட்சி அரசாங்கத்தால் முறையாக வழங்கப்படவில்லை. ஜனாதிபதி கோத்தபாய சிறந்த தலைவர் என்பதை அவரது செயற்பாடுகளின் ஊடாக நாட்டு மக்களுக்கு உணர்த்திவருகின்றார். முன்னைய அரசாங்கங்களில் இடம்பெற்ற பெரும் தொகையான செலவுகளை அவர் தற்போது கட்டுப்படுத்தியுள்ளார்.
அவர் முன்மாதிரியாக செயற்படுகின்றமையினால் அரசாங்கத்தின் ஏனையவர்களும் அவரை பார்த்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். நல்லாட்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் தொடர்பில் தற்போதே தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட இறுவட்டுகளில் பதிவாகியுள்ள விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தினால் நாட்டில் சுதந்திரமாக இயங்க வேண்டிய சட்டத்துறையிலே எவ்வளவு மோசடிகளை செய்துள்ளார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த செயற்பாட்டினால் சட்டத்துறை மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான மோசடிகளில் பங்குகொண்டுள்ள அரசியல்வாதிகள் , சட்டத்துறை அதிகாரிகள் , பொலிஸார் , குற்றப்புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட தரப்பினர் மீது பரிசீலனைகளை செய்து அதற்கமைய அவர்களுக்கான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அரசியல் பழிவாங்கல் போக்கில் செயற்படுவதை போல் வெறுமனே கைதுகளை செய்யாது, விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுக்கமையவே தண்டனைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட்டாலும் ஜனநாயக ஆட்சியை முன்னெடுப்பதற்காக தொடர்ந்தும் செயற்படுவோம்.கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதிலளிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தெரிய பல முறை கேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
சுதந்திரமான சட்டத்துறை இயங்குவதாக தெரிவித்து வந்தவர்களின் ஆட்சிக்காலத்திலே சட்டத்துறைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.இந்த விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சும் கவனம் செலுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM