இந்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர் இன்று முதல் சகல பாடசாலை மாணவர்களுக்கும் விநியோகம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  

சலக அரச பாடசாலைகளுக்கும் மற்றும் பிரிவெனா பாடசாலை  மாணவர்களுக்குச் இச்சீருடைக்கான வவுச்சர்களை வழங்குவதற்காகச் சகல நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் படி இன்று நாடு பூராகவும் உள்ள  சகல  அரச பாடசாலை மாணவர்களுக்கும்  சீருடைக்கான வவுச்சரை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தாண்டு பாடசாலை  சீருடைக்கான வவுச்சர்கள் 11 பிரிவுகளின் வகைப்படுத்தலுக்கமையவே விநியோகமாகவுள்ளது. அதன் படி 440 ரூபா  முதல் ஆயிரத்து 800 ரூபா வரை பாடசாலை மாணவர்களின் தர அடிப்படையில் வவுச்சரின் பெறுமதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு 4.2 மில்லியன் மாணவர்களுக்கு  வழங்கத் தீர்மானித்துள்ளனர். 

மேலும், வறுமைக் கோட்டிற்குட்பட்ட பகுதியில் 100ற்கும் குறைவான மாணவர்கள் கற்கும் பாடசாலையில்  பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக 7இலட்சம் பெறுமதியான வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

முன்னைய ஆண்டுகளில் அமைச்சர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட வவுச்சர்கள் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பாடசாலை மாணவர்களின் புகைப்படங்கள்  வவுச்சர்களில் பொறிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.