இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் உதவியுடன் பரிசோதித்து, அதன் பின்னர் தகுதியற்ற பஸ்களை சேவையிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதுளை, மடூல்சீமை பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார்.