மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளது. எனவே நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண ஆதரவுடன் மூன்றில் இரண்டு என்ற பெரும்பான்மையுடன் குறித்த பிரேணையை வெற்றிக்கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று கவிழுமா அல்லது நாளை கவிழுமா என எதிர்ப்பார்த்திருக்கும் கயவர்களுக்கு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தகுந்த பாடமாக அமையும். குறித்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த கூட்டு எதிரணிக்கு எமது நன்றிகளை தெரிவிக்கின்றோம் என்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.   

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.