நான்கு பாடசாலை  மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டில்   சந்தேகத்தின் பேரில் கைதான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த சம்பவத்தில் கைதான வைத்தியரை அம்பாறை நீதிமன்ற நீதிவான் அசாங்க கிட்டியாவத்த முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(7) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வரை சந்தேக நபரான வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.