(செ.தேன்மொழி)

குருணாகலை - கொழும்பு பிரதான வீதியில் பஸ், முச்சக்கரவண்டி மற்றும் பாரவூர்தி மேதி இடம்பெற்ற விபத்தில் சிறுவரொருவர் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர். 

பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணாகலை - கொழும்பு வீதியில் இன்று பிற்பகல் 2.45 மணியளவிலே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொத்துஹெர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குருணாகலையிலிருந்து கேகாலை நோக்கிச் சென்ற தனியார் பஸ் முன்னால் சென்ற முச்சக்கர வண்டியை கடந்து செல்லமுற்பட்டுள்ளது. 

இதன்போது முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ள பஸ் பின்னர் எதிர்திசையில் வந்த பாரவூர்தியுடனும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதன்போது பஸ்சுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் , சம்பவத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களுள் ஒரு சிறுபிள்ளையும் இருப்பதாக தெரிவிக்கிப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் குருணாகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.