அவிசாவளை கொஸ்கம சாலாவ இராணுவ  முகாம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் உள்ள ஒரு பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதும், முகாம் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 500 மீற்றருக்குள் உள்ள ஏனைய பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்க எமக்கு அனுமதி கிடைக்கவில்லை என மின்சார சபை தெரிவித்தது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட, 

மின்சாரம் தடைப்பட்டிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதிகளில் மின்சார இணைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். எவ்வாறாயினும் இன்றைய தினம் மின்சாரத்தை வழங்க முயற்சி செய்வோம்.