அப்புத்தளையில்  விபத்திற்குள்ளான சிறிய ரக விமானத்தின் விமானியின் கைப்பாகம் இரு தினங்களுக்குப்பின் நேற்று  மாலை மீட்கப்பட்டு அப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அப்புத்தளையில் கடந்த 03 ஆம் திகதியன்று  விபத்திற்குள்ளான சிறிய ரக விமானத்தின் சித்தரி கிடக்கும் பாகங்கள் மீட்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் விமானியின் கைப்பாகமெனக் கருதப்படும் சிதைந்த மனித கைப்பாகத்தை மீட்புப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களால் மீட்கப்பட்டது. 

இதையடுத்து மீட்கப்பட்ட குறித்த கைப்பாகம் அப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டது. 

பொலிசாரினால் அக் கைப்பாகம் அப்புத்தளை அரசினர் வைத்தியசாலை ஆய்வுக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.