இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் ஒன்றிற்காக தன்னுடைய சொந்த குரலில் பாடி அசத்தியிருக்கிறார் இந்திய துடுப்பாட்ட வீரர் வீராட் கோஹ்லி.

இந்தியாவில் 7 நகரங்களில் ஜுலை மாதம் நடைபெறவிருக்கும் பிரிமீயர் ஃபுட்சல் விளையாட்டு திருவிழாவிற்காக பாடல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை இந்தியாவின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லியை வைத்து பாடவைத்திருக்கிறார்கள். 

இதற்கு ஓஸ்கர் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த இசை வெளியீடு ஜுன் மாதம் 15 ஆம் திகதியன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது என்று இதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடியது குறித்து தன்னுடைய ட்வீட்டரில் குறிப்பிட்டிருக்கும் விராட், சந்தோஷமான தருணம். இசையுலகின் ஜாம்பவான் உடன் இன்றைய தினத்தை கழித்திருக்கிறேன். என்று பதிவிட்டிருக்கிறார்.

தகவல் : சென்னை அலுவலகம்