2019 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் பல்வேறு நாடு களிலிருந்து இலங்கைக்கு 16 இலட்சத்து 72 ஆயிரத்து 39 (16,72,039) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

அதேபோன்று கடந்த 2018 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து 20 இலட்சத்து 80 ஆயிரத்து 627 (20,80,627) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதனடிப்படையில் பார்க்கின்ற போது கடந்த வருடம் 2018 முதல் 11 மாதங்களில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையைவிட 2019 முதல் 11 மாதங்களில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின்  வருகை 4,08,588 பேரால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது 19.6 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.