உலகின் மிகப்பெரிய வருடாந்த பனிச்சிற்பத் திருவிழா  ஞாயிற்றுக்கிழமை சீனாவில் கோலாகலமாகத் தொடங்கியது. 

சீனா - ரஷ்யாவின் சைபீரியாவின் எல்லையை ஒட்டியுள்ள ஹார்பின் பகுதியில் தொடங்கிய இந்தத் திருவிழாவில் பல்வேறு நாடுகளின் முக்கிய கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மின்னும் விளக்கொளிகளால் பனிச்சிற்பங்கள் பொன்னென மின்னி வருகின்றன.

15 நாட்களில் சுமார் 10,000 தொழிலாளர்களால் 148 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட , நியான்-லைட் 'ஸ்னோ கிங்டம்'  சுற்றுலாப் பயணிகளை திகைக்க வைத்துள்ளது.

தற்போது சுமார் 6 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடந்து வரும் இந்தச் சிற்பத் திருவிழாவிற்காக சோங்வா ஆற்றில் இருந்து 2 லட்சம் கன மீட்டர் பனிக்கட்டி எடுத்து வரப்பட்டது. 

இங்கு பார்வையாளர்களைக் கவருவதற்காக குளிர்கால நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிற்பத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.