பதுளை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

Published By: Vishnu

07 Jan, 2020 | 12:04 PM
image

பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் 6 ஆம் கட்ட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பகுதியிலிருந்து எக்கிரிய எனும் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு பாரிய வளைவு பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவருடன் 12 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21