சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான வைத்திய அறிக்கையை பெற 3 பிரதேச அலுவலகங்கள்!

Published By: Vishnu

06 Jan, 2020 | 09:06 PM
image

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற தேவையான வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவம் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அனுமதிப் பத்திரத்துக்கு தேவையான வைத்திய அறிக்கை சான்றிதழ் போக்குவரத்து வைத்திய நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளும் போது உள்ள நெருக்கடியை தவிர்ப்பதற்கு தேவையான மாற்று நடவடிக்கை ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு போக்குவரத்து முகாமைத்துவ மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலானோர் கொழும்புக்கு அப்பால் வெளி இடங்களில் இருந்து வருகை தருகின்றனர். 

இவர்களின் வசதிக்காக இந்த பிரதேச அலுவலகங்கள் 3 புதிதாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரத்தினபுரி, பண்டாரவளை, நுவரெலிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வசதிக்காக அலுவலகம் ஒன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் போன்று வட மத்திய மாகாண மக்களுக்காக துணை அலுவலகம் ஒன்றும் தம்புள்ளையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேபோன்று வடமேல், கம்பஹா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பிரதேச மக்களுக்காக நீர் கொழும்பில் துணை அலுவலகம் ஒன்றையும் அமைப்பதற்கு தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் அமரவீர இந்த அலுவலகங்களை அமைப்பதற்கான பணிகளை துரிதமாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வாகன அனுமதி பத்திரத்தை அச்சிட்டு வெளியிடக்கூடிய வசதிகளைக்கொண்ட அலுவலகம் ஒன்றை அனுராதபுரத்தில் அமைப்பதற்கும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகை பணத்தையும் காலத்தையும் செலவிட்டு கொழும்புக்கு வருவது இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றது.`

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரிட்டன்...

2026-02-18 18:14:01
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த...

2026-02-18 18:02:32
news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54