பதுளையில் கோர விபத்து ; 7 பேர் பலி - 40 பேர் காயம்

By T Yuwaraj

06 Jan, 2020 | 07:03 PM
image

பதுளை பசறைப் பகுதியிலிருந்து எக்கிரை நோக்கிப் பயணித்த அரச பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, பசறைப் பகுதியிலிருந்து எக்கிரை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மடூல்சீமை பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  படுகாயமடைந்த அனைவரும் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image may contain: outdoor

பசறை மடூல்சீமை பிரதான வீதியின் 6 ஆம்  கட்டைப் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து விபத்துக்குள்ளான பஸ்ஸை மீட்கும் பணியில் பொலிஸாரும் மீட்பு படையினரும் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right