இம்முறை ஜெனிவாவில் இலங்கையின் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட தீர்மானம் - சுமந்திரன் 

Published By: Vishnu

06 Jan, 2020 | 03:53 PM
image

(ஆர்.யசி)

போர் குற்றங்களில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை ஏற்றுவிட்டு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன்  இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் என்ன சொல்லப்போகின்றனர் என்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை ஆதரித்ததன மூலம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி விடுவிப்பு, அரசியல் கட்சிகளின் விடுதலை என பல நல்ல விடயங்கள் இடம்பெற்றது. எனினும் அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் ஆரோக்கியமான நகர்வுகள் இடம்பெறவில்லை. அதற்கு ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே காரணம். அவர்களின் சுயநல அரசியல் போக்கே அரசியல் அமைப்பு தடுக்கப்பட காரணமாக அமைந்தது. 

அரசியல் அமைப்பு விடயங்கள் மட்டும் காணமல் போனோர் விடயங்கள் குறித்து நாம் இன்னமும் கேள்வி எழுப்பிக்கொண்டுதான் உள்ளோம். போர் முடிந்த பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. யுத்த காலத்தில் இறந்தவர்கள் இருக்கலாம், வெளிநாடு சென்றவர்கள்  இருக்கலாம். ஆனால் அதனையும் தாண்டி காணமால் போனார் குறித்த உண்மைகளை கண்டறிய வேண்டும். 

இந்த விடயத்தில் அரசியல் தலையீட்டுடன்  ஒரு நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். 

மேலும் எம்.சி.சி ஒப்பந்தம் குறித்து பேசப்படுகின்றது. இந்த  ஒப்பந்ததில் சில தீமைகள் இருந்தாலும் கூட இலங்கையைக்கு ஆரோக்கியமானதும் நன்மை பகைக்கும்  விடயங்கள் பல உள்ளது என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36