(ஆர்.யசி )

பாராளுமன்றம் நாளை கூடுகின்ற நிலையில்  ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான இரு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது. 

எனினும் விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பை  கேட்பதில்லை என கட்சிகள் இடையில் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. 

எட்டாவது பாராளுமன்றதின் நான்காம் கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் கூடிய வேளையில் அன்றைய தினம் ஜனாதிபதியின் அக்கிராசன உரை இடம்பெற்றது. 

அதனை தொடர்ந்து கூடிய விசேட கட்சி தலைவர் கூட்டத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன் உரை மீதான விவாதம் வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கேட்டுக்கொண்டதற்கு அமைய கட்சி தலைவர் கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.