உணவுகளை தெரிவுசெய்வதில் அவதானமாக இருங்கள் !

Published By: Digital Desk 3

06 Jan, 2020 | 02:30 PM
image

எமது உணவுத் தேர்­வுகள் பல சந்­தர்ப்­பங்­களில் தனி­நபர் நல­னுக்கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கும் பாதிப்­பு­களை தரு­வ­தாக அமைந்து விடு­கின்­றன. உணவு ஒன்றின் உற்­பத்தி முறை­களும்  அதனை நீண்­ட­காலம் பேணி வைப்­ப­தற்­கான  பாது­காப்பு உத்­தி­களும்  இந்த சீர்­கே­டு­க­ளுக்கு கார­ண­மாக அமை­கின்­றன. இதனால் உணவை தேர்வு செய்­கின்ற போது  சுற்­றுச்­சூழல் மற்றும் சுகா­தார தாக்­கங்­களை குறைக்கும் வகை­யி­லான உண­வு­களை அறிந்து தெரிவு செய்தல் அவ­சி­ய­மாகும்.  

உணவு வகைகளை நீண்ட தூரம் கொண்டு செல்­வதன் மூலம் விநி­யோகம் செய்­யப்­பட வேண்­டிய சந்­தர்ப்­பங்­களில் போக்­கு­வ­ரத்­துக்­காக  பெற்­றோ­லியப் பொருட்­களின் பயன்­பாடு  அதி­க­ரிப்­ப­துடன் உணவு அதன் தரத்தில் கெட்­டுப்­போ­காமல் இருப்­ப­தற்­காக பல்­வேறு இர­சா­ய­னங்­களை பயன்­ப­டுத்­த­வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­ப­டு­கி­றது. இந்த வகையில் உணவு உற்­பத்தி செய்­யப்­படும் இடத்­தி­லி­ருந்து அதன் இறுதி நுகர்­வோரை சென்­ற­டை­வ­தற்கு எடுக்கும் தூரம் முக்­கி­ய­மான ஒரு குறி­காட்­டி­யாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இந்தக் குறி­காட்­டியே 'உண­வுமைல்' என அழைக்­கப்­ப­டு­கின்­றது.  1990களில் ஐக்­கிய இராச்­சி­யத்தை சேர்ந்த பேரா­சி­ரி­ய­ரான ரிம் லாங் (Tim Lang) என்­பவர் இந்த குறி­காட்டி முறையை அறி­முகம் செய்தார். நீண்ட தூரங்­களில் இருந்து உணவு இறக்­கு­மதி செய்­யப்­படும் போது நேரும் சூழல் தாக்­கங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி உள்ளூர் உண­வு­களின் நுகர்வை தூண்­டு­வதே இவரின் நோக்­காக இருந்­தது.

உணவு அதன் உற்­பத்தி புள்­ளி­யி­லி­ருந்து நீண்ட தூரம் கொண்டு செல்­லப்­படும் போது, மாசு­ப­டுத்தும் கப்பல் முறைகள், மோச­மான வேலை நிலை­மைகள் மற்றும் விநி­யோகச் சங்­கி­லியின் வெவ்­வேறு பகு­தி­களின் நியா­ய­மற்ற உள்­ளீர்ப்பு என்­ப­வற்­றுக்கு உட்­ப­டு­கின்­றது. இவை நேர­டி­யாக அதி­க­ரித்த காபன் உமிழ்வை சுற்­றா­ட­லுக்கு ஏற்­ப­டுத்­து­கி­றது.

உலக காபன் உமிழ்வில் 17% உணவு உற்­பத்தி மற்றும் அதன் விநி­யோக சங்­கிலி மூலம் ஏற்­ப­டு­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  குறைந்த விநி­யோகச் சங்­கி­லி­களைக் கொண்ட உண­வுகள் மூலம் CO2 உமிழ்வைக் குறைக்க முடியும் என்­பது இதன் மூலம் தெளி­வா­கின்­றது.

உணவு மைல் புள்­ளி­வி­ப­ரங்கள்

இலங்­கையின் மொத்த அந்­நிய செலா­வ­ணியில் 12 - – 13% ஆனது உணவு இறக்­கு­ம­திக்குச் செல­வி­டப்­ப­டு­கி­றது.  அரிசி, கோதுமை, பருப்பு, செத்தல் மிளகாய், வெங்­காயம், உரு­ளைக்கி­ழங்கு, கரு­வாடு, பால் உற்­பத்­திகள்  முத­லி­யவை இலங்­கையின் முதன்­மை­யாக இறக்­கு­மதி செய்­யப்­படும் உணவுப் பொருட்களாகும்.  இலங்­கையில் இவற்­றுக்­கான அதி­க­ரித்த உற்­பத்தி வாய்ப்­புக்கள் காணப்­பட்ட போதிலும் இவை தொடர்ச்­சி­யாக இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற போக்­கினை புள்­ளி­வி­பரங்கள் காட்­டு­கின்­றன.

2018 களில் மொத்த உணவு இறக்­கு­ம­திக்­கான செல­வினம் 422,489 மில்­லியன் ரூபாய்களாயி­ருந்­தது. உள்­ளூரில் உற்­பத்தி செய்­யக்­கூ­டிய சில உணவு வகை­களைக் கூட உள்ளூர் உற்­பத்தி செலவை விட இறக்­கு­மதி செலவு குறைவு என்­ப­தனால்  இறக்­கு­மதி செய்து கொண்­டி­ருக்­கின்றோம். குறைந்த வேலையாள் ஊதியம், பெரு­ம­ளவு உற்­பத்தி செய்­வ­தனால் அலகு கூறுக்­கான உற்­பத்திச் செலவு குறை­வாக இருத்தல் என்­ப­வற்றின் கார­ண­மாக வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வது மலி­வா­ன­தாக காணப்­ப­டு­கி­றது. எடுத்­துக்­காட்­டாக வெங்­காயம், உரு­ளைக்­கி­ழங்கு, அரிசி முத­லான உண­வு­களைக் குறிப்­பி­டலாம். இத்­த­கைய உண­வுகள் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் போது இவை உணவு மைல்­களை அதி­க­ரிப்­ப­துடன் உள்ளூர் உற்­பத்­தி­க­ளையும் பாதிக்­கின்­றன.

நகர்ப்­பு­றங்­க­ளுக்கு அதனைச் சூழ­வுள்ள பகு­தி­களிலிருந்து மூலப் பொருட்­க­ளாக அதா­வது நேரடி விவ­சாய உற்­பத்­தி­க­ளாக உணவுப் பொருட்கள் கொண்டு செல்­லப்­ப­டு­வதும் அங்கு அவை ஆடம்­பர உண­வு­க­ளா­கவும் உட­னடி (instant) உண­வு­க­ளா­கவும் உருமாற்­றப்­பட்டு மீண்டும் தூர­மாக  உள்ள சுற்­றியல் பகு­தி­க­ளுக்கு அனுப்பி வைக்கப்படு­வதும் பொது­வாக காணப்­ப­டு­கி­றது. இதுவும் உணவு மைல்­களை அதி­க­ரிக்­கின்ற ஒரு உணவு உற்­பத்தி செயற்­பா­டாகும். 2014 இல் ஹெக்டர் கொப்­பே­க­டுவ விவ­சாய ஆராய்ச்சி பயிற்சி நிறு­வனம் வெளி­யிட்ட 'இலங்­கையின் உணவு நுகர்வு கோலம்' பற்­றிய அறிக்­கையில் மர­பு­வழி உணவுப் பழக்க வழக்­கங்­களில் இருந்து உட­ன­டி­யான உண­வுக்கும் ஆடம்­பர உண­வுக்கும் இலங்கை மக்கள் மாறி­வரும் போக்கு காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ச­ர­மான வாழ்க்கை முறை இந்தப் போக்­குக்கு கார­ண­மா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

மர­பு­வழி உண­வு­களை பயன்­ப­டுத்­து­வதில் உள்ள தடைகள் எவை?

 ஆதி மனிதன் உண­வுக்­காக காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தான். அன்­றைய நாளுக்­கான உணவே அவ­னது நாளாந்த இலக்­கா­யி­ருந்­தது. விவ­சாய சமூக கட்­ட­மைப்பு  தோற்றம் பெற்ற பின்னர் ஒரே இடத்தில் நிலை­யாக வாழ தொடங்­கினான். தனக்குத் தேவை­யான உணவை தானே உற்­பத்தி செய்தான். காலத்­துக்கு ஏற்ப உற்­பத்­தி­யையும் அது சார்ந்த உண­வு­க­ளையும் வாழ்க்கை முறை­யையும் அமைத்­துக்­கொண்டான். கால ஓட்­டத்தில் அவ­னது வாழ்க்கை முறைகள் இயந்­தி­ர­ம­யப்­பட்­டன. வாழ்க்­கையை இல­கு­வாக்கும் வழி­மு­றை­களை தேடி அலைந்தான்.  இதே இலக்கு அவ­னது  உணவுத் தேடல்­க­ளிலும் அமைந்­தது. சுவை­யான கவர்ச்­சி­யான உண­வு­வ­கை­களை இல­கு­வாக கொள்­ளுதல்  என்­கின்ற முறை­மைக்கு அவன் ஆளானான். வேண்­டிய எந்தக் காலத்­திலும்,  ஆண்டு முழு­வ­துக்­கு­மான பழங்­க­ளையும் காய்­க­றி­க­ளையும் ஏனைய உண­வு­க­ளையும் ஒரே இடத்தில் பெறக்­கூ­டிய சூப்பர் மார்க்­கெட்­டு­களைப் பழக்­கப்­ப­டுத்திக் கொண்டான்.  உல­க­ளா­விய உற்­பத்­தி­களை எல்லாம் ஒரே இடத்தில் பெற்­றுக்­கொள்­ள­லானான்.

இவ்­வா­றுதான் உள்ளூர் உணவுப்   பொரு­ளா­தா­ரங்­க­ளி­லி­ருந்து ஆடம்­பர உணவுப்  பொரு­ளா­தா­ரங்­க­ளுக்கு மக்கள் மாற்­ற­ம­டைந்து தேவையை பூர்த்தி செய்­து­கொண்­டனர். உடல் உழைப்பை குறைத்து நேர­டி­யாக தரு­விக்­கப்­படும் உண­வு­க­ளுக்கு மாற்­ற­ம­டைந்து கொண்­டனர்.

தேவைக்­கேற்ப பரு­வ­கா­ல­மாக வளர்க்­கப்­படும் உணவை நுகர்­வது என்­ப­தி­லி­ருந்து விலகி காலம் தப்­பிய போதும் பாது­காத்து பயன்­ப­டுத்­தக் ­கூ­டிய ஆடம்­பர உண­வு­க­ளுக்கு மாறி வந்­தனர்.   அறு­வ­டைக்குத் தயா­ராக இருக்கும் போது உணவை நுகர்­வுக்கு வாங்­கு­வ­தற்கு எதி­ராக இதை எடை­போட்டு பார்க்க வேண்டும். பரு­வத்­துக்கு ஏற்ப உற்­பத்தி செய்­யப்­படும் உண­வு­களை வாங்­கு­வது உணவு மைல்­களைக் குறைப்­பது மட்­டு­மல்­லாமல், உள்ளூர் விவ­சாயம் மற்றும் உணவு வளர்ச்­சியை ஊக்­கு­விக்கும் என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க காலம் தப்­பிய உண­வு­களை நீண்ட காலம் பேணு­வ­தற்­காக அந்த உணவின் மீது பிர­யோ­கிக்­கப்­படும் இர­சா­ய­னங்கள் குறித்தும் நாம் மனங்­கொள்ள வேண்டும்.

அப்பிள் முத­லான பழ வகைகள் நீண்ட தூரம் கொண்டு செல்­வ­தற்கு தயார்படுத்தப்படும் போது அறு­வ­டைக்கு பின்­னரான பங்­கசுத் தாக்­கங்­களும் சேமிப்பு சேதங்கள் மற்றும் சேமிப்பு பீடை­களை கட்­டுப்­ப­டுத்தும் வகை­யிலும் நீண்ட காலம் அவற்றின் புதுமை குன்­றாது இருப்­ப­தற்­கா­கவும் அவற்­றின்­மீது பல்­வேறு இர­சா­ய­னங்கள் பிர­யோ­கிக்கப்படு­கின்­றன. 10- – 12 வெவ்­வேறு  இர­சா­யன பொருட்கள் அப்பிள் உற்­பத்­தியின் போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சில தக­வல்கள் குறிப்­பி­டு­கின்­றன.  இவற்றை நேர­டி­யாக உண்­ணக்­கூ­டாது எனவும் வேறு தூய்­தாக்­கிகள் கொண்டு சுத்­தப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பல்­வேறு பாது­காப்பு குரல்கள் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இத்­த­கைய தூய்­மைப் ­ப­டுத்தும் இர­சா­ய­னங்­களும் நீண்­ட­கால நோக்கில் பாதிப்­பு­களை தராது என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை. இந்தத் தலைப்பில் இன்­னொரு விட­யத்­தையும் கவ­னிப்­பது பொருத்தம் என நினைக்­கின்றேன்.  தூய குடிநீர் வச­திகள் நிலக்கீழ் நீராக பெறக்­கூ­டிய கிரா­மங்கள் கூட குழாய் நீர்க்  கலா­சா­ரத்­துக்கு மாற்­ற­ம­டைந்து கொண்­டு­வ­ரு­கின்­றன. நிலத்­த­டியிலிருந்து பெறப்­படும் குடிநீர், குழாய் நீரை விட ஆரோக்­கி­ய­மா­னது. தொடர்ச்­சி­யாக குளோரின் பிர­யோ­கித்து சுத்­தப்­ப­டுத்­தப்­பட்ட குழாய் நீரை அருந்­து­வது பல சுகா­தார சீர்­கே­டு­களை ஏற்­ப­டுத்­து­வ­தையும் நாம் ஞாப­கத்தில் கொள்ள வேண்டும்.

உணவு மைல்கள் என்­பது உண­வுக்­கான முழு செல­வு­க­ளையும் நாங்கள் செலுத்­து­வதை உறுதி செய்­வ­தற்­கான ஒரு கரு­வி­யாகும். உணவு விற்­கப்­படும் இடத்­துக்குச் செல்­வ­தற்கு உணவு எவ்­வ­ளவு தூரம் பய­ணிக்க வேண்­டி­யி­ருந்­தது என்­ப­தற்­கான தெளி­வான குறிப்பை இது தரு­கி­றது. ஆனால், பயண தூரத்­துக்கு அப்பால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கும் பொரு­ளா­தா­ரத்­துக்கும் அதிக செல­வுகள் இருக்­கும்­போது, குறிப்­பாக அசல் உற்­பத்தி செயல்­பாட்டில், திரைக்கு பின்னால் என்ன நடக்­கி­றது என்­ப­தற்­கான மிக விரி­வான படத்தை எங்­க­ளுக்கு வழங்­கு­வதில் உணவு மைல்கள் தவ­று­கின்­றன. நம்­ப­க­மான உள்ளூர் விநி­யோகச் சங்­கி­லிகள் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை ஆகி­யவை தனி­ந­பர்­க­ளுக்கு நெறி­முறை மற்றும் சுற்­றுச்­சூழல் உணவு தேர்­வு­களை செய்ய உத­வு­கின்­றன.

உணவு மைல்­களைக் குறைத்தல் 

நிலை­யான மற்றும் ஆரோக்கியமான உணவு தேர்வுகளுக்கான பின்வரும் ஆறு பரிந்துரைகள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன.

1. ஆரோக்கியமான மற்றும் உள்ளூர் விளைபொருட்களை உண்ணுதல்.

2.ஒரு நெகிழக்கூடிய நிலையான உணவு பொருளாதாரத்தை ஆதரித்தல்.

3.உணவு உற்பத்தியில் நிலையான அதிகரிப்பு.

4.உணவு உற்பத்தியில் இருந்து மாசு கூறுகள் உமிழ்வடைவதைக் குறைத்தல்.

5.உணவுக் கழிவுகளை குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறு செயலாக்கம் செய்தல்.

6.உணவு அறிவை அதிகரித்தல் மற்றும் கிடைக்கும்போது சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

இந்தக் குறிக்கோள்கள் அதன் திசையைத் தெளிவாகக் காட்டும். ஒரு நிலையான உணவுப் பொருளாதாரத்தை உருவாக்க உதவும். உள்ளூர் தயாரிப்புகளை திரட்டுதல், விநியோகித்தல், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதை ஊக்குவிப்பதற்கு இது உதவும். உள்ளூர் உணவுகள் நமது சுகாதாரத்துக்கு கேடற்றவை என்பதை கருத்தில் கொண்டு உடனடியாக பறிக்கப்பட்ட காய்கறிகள், பழங்களை நுகர்வது உணவு மைல்களை குறைக்கவும் பயன்படும்.

- சஞ்சீவி சிவக்குமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29