பெண்ணின் இனப்­பெ­ருக்கத் தொகு­தியின் முக்­கிய உறுப்­பான கர்ப்­பப்பை, அடி­வ­யிற்றுப் பகு­தி­யினுள் பல தசை­க­ளி­னதும், தொடுப்­பி­ழை­யங்­க­ளி­னதும் உத­வி­யுடன் தாங்­கப்­பட்­டுள்­ளது. இத்­தாங்­கு­மி­ழை­யங்­களின் பல­வீ­னத்தால் கர்ப்­பப்பை சற்றுக் கீழி­றங்கி கர்ப்­பப்பை இறக்­க­மாக மாறு­கின்­றது. (whom prolapse) இது பெண்­களைப் பொறுத்­த­வரை மிகவும் ஒரு அசெ­ள­க­ரி­ய­மான நிலை. இதற்குப் பல எளிய முறை­யி­லான தீர்­வுகள் உள்­ளன. ஆனால் பல பெண்கள் இதனை கூச்­சத்­தி­னாலும், வெட்­கத்­தி­னாலும் மற்­ற­வர்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தாது இருப்­ப­துடன் இதற்­கான சிகிச்­சை­களும் சற்றுக் சிக்கல் நிறைந்­த­வை­யாக இருக்­கு­மென நினைத்து தாமே இதனை இறு­தி­வ­ரையில் தமக்­குள்­ளேயே அனு­ப­வித்து வாழ்­ப­வர்கள் பல­ருள்­ளனர். ஆனால் இறு­தியில் அவர்கள் மிகவும் முது­மை­ய­டைந்த பின்னர் இந்த கர்ப்­பப்பை இறக்­கத்­தினால் ஏற்­படும் சிக்­கல்­க­ளினால் அவ­திப்­ப­டு­வது மட்­டு­மல்ல அவ­ரைக்­கூட இருந்து பரா­ம­ரிக்கும் அவ­ரது உற­வி­னர்­களும் இடர்­படும் இன்­னல்­களில் பங்­கெ­டுக்க நேரி­டு­கின்­றது. அதா­வது தகுந்த நேரத்தில் இந்த கர்ப்­பப்பை இறக்­கத்தை தகுந்த முறையில் கையாண்டு, சரி­யான தீர்­வு­களை வழங்­காது தவ­ற­வி­டு­வோ­மே­யானால், இறுதிக் காலத்தில் இன்­னல்­களை எதிர்­கொள்ள நேரி­டு­கின்­றது.

ஆகையால் இந்தக் கர்ப்­பப்பை இறக்­க­மா­னது பெண்­க­ளது வாழ்க்கைக் காலத்தில் எதிர்­கொள்ளும் முக்­கிய விடயம். இதனை எவ்­வாறு கையாண்டு பெண்­க­ளுக்­குள்ள சிக்­கல்­களைத் தீர்ப்­ப­தென ஆராய்வோம்.

கர்ப்­பப்பை இறக்­கத்­திற்­கான கார­ணங்கள்

கர்ப்­பப்­பையைத் தாங்கும் இழை­யங்­களும் தசை­களும் பல­வீ­ன­ம­டை­வதே இந்தக் கர்ப்­பப்பை இறக்­கத்­திற்­கான மூல­கா­ர­ண­மாகும். இது சில­ருக்கு பரம்­ப­ரை­யா­கவே பல­வீ­ன­மான இழை­யங்­களைக் கொண்­டி­ருப்­ப­தனால் நடுத்­த­ர­வ­யதைத் தாண்டும் போது ஏற்­ப­டலாம். எனினும் பொது­வான கார­ண­மாக பல குழந்­தை­களை சாதா­ரண பிர­சவம் மூலம் பெற்­றெ­டுத்த தாய்­மா­ருக்கு அதிலும் மிகவும் கடி­ன­மான நீண்ட நேரம் பிர­ச­வங்­களை எதிர்­கொண்ட பெண்­களில், கர்ப்­பப்­பையைத் தாங்கும் இழை­யங்கள் காயப்­பட்டு பல­வீ­ன­ம­டை­வ­தாக ஏற்­ப­டு­கின்­றது. அடுத்­த­தாக மெனோபோஸ் பரு­வத்தை அடைந்த பின் பெண்­களில் ஓமோன்­களின் குறை­பாட்­டினால் இழை­யங்கள் பல­வீ­ன­ம­டை­வதால் இந்­நிலை ஏற்­ப­டலாம். இவ்­வா­றான கர்ப்­பப்பை இறக்கங்­களை மேலும் தீவி­ரப்­ப­டுத்தும் கார­ணி­க­ளாக நாற்­பட்ட இருமல், மலச்­சிக்கல் என்­பன பங்­க­ளிக்­கின்­றன.

கர்ப்­பப்பை இறக்­கத்தின் வகைகள்

கர்ப்­பப்பை இறங்­கு­வது போல் யோனி வாசல் சிறு­நீர்ப்பை, சிறு­நீர்­வழி, மலக்­குடல் என்­ப­னவும் கீழி­றங்கி வீக்­க­மாகக் காணப்­படும். கர்ப்­பப்பை இறக்­கமும் பல நிலை­க­ளாக ஆரம்­ப­நிலை, இடைப்­பட்ட நிலை, பிந்­திய நிலை எனும் கட்­டங்­க­ளாகக் காணப்­படும். சிலரில் கர்ப்­பப்பை இறக்கம் மட்டும் காணப்­படும், சிலரில் கர்ப்­பப்பை இறக்­கத்­துடன் சேர்ந்து சிறு­நீர்ப்பை இறக்கம், மலக்­குடல் இறக்கம் போன்­றன காணப்­படும். வேறு சிலரில் கர்ப்­பப்பை இறக்கம் இல்­லாமல் சிறு­நீர்ப்பை இறக்கம் அல்­லது மலக்­குடல் இறக்கம் காணப்­படும்.

கர்ப்­பப்பை இறக்­கத்­தினால்

ஏற்­படும் நோய் அறி­கு­றிகள்

கர்ப்­பப்பை இறக்கம் உள்­ள­வர்­களில் யோனி­வாசல் பகு­தியில் ஒரு வீக்கம் போன்று காணப்­படும். இதன்­போது வலி ஏற்­ப­டு­வ­தில்லை. அத்­துடன் இந்த வீக்கம் காலையில் எழுந்­த­வுடன் மிகவும் குறை­வா­கவும் மாலை வேளை­க­ளிலும் கூடி­ய­ளவும் வேலை செய்­கின்ற வேளை­க­ளிலும் இது தெளி­வாகத் தெரியும். சில­வே­ளை­களில் இந்தக் கர்ப்­பப்பை இறக்கப் பகு­தியில் புண் போன்று ஏற்­பட்டு இரத்தம் அல்­லது திரவம் போன்­றன வடிதல் ஏற்­படும். ஆனால் இவை எதுவும் புற்­று­நோய்கள் அல்ல. சிறு­நீர்ப்­பையும் சேர்ந்து இறங்­கி­யுள்­ள­வர்­களில், சிறுநீர் கழிப்­பதில் சிக்­கல்கள், அடிக்­கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, இருமும் போது தும்மும் போதும் சிறுநீர் கட்­டுப்­பா­டின்றி வெளி­யே­றுதல் போன்­றன ஏற்­படும். மேலும் மலக்­குடல் பகுதி இறங்­கி­யுள்­ள­வர்­களில் மலங்­க­ழிப்­பதில் கடி­னங்கள், மலம் பூர­ண­மாகக் கழிக்­கப்­ப­டாமை போன்ற உணர்­வுகள் ஏற்­படும்.

கர்ப்­பப்பை இறக்­கத்­திற்கு எவ்­வா­றான சிகிச்சை முறைகள் உள்­ளன?

இதற்­கான சிகிச்­சைகள் பிர­தா­ன­மாக இரு­வ­ழி­களில் மேற்­கொள்­ளப்­படும். அதா­வது கர்ப்­பப்பை இறக்­கத்தை உயர்த்தி அதனை தாங்கக் கூடிய வளை­யங்கள் (Pessary) போடப்­ப­டலாம். இதன் பின் இவற்றை 3 மாதங்­க­ளுக்கு ஒரு தடவை மாற்­ற­வேண்டும். இதன்­போது சத்­தி­ர­சி­கிச்­சைகள் தவிர்க்­கப்­ப­டலாம். ஆகையால் இந்த வளை­யங்கள் போடப்­படும் முறை, சத்­திர சிகிச்­சை­க­ளுக்குத் தாக்­குப்­பி­டிக்க முடி­யாத உடல் வாகைக் கொண்­ட­வர்­க­ளுக்கும், சத்­தி­ர­சி­கிச்­சைக்கு தயங்­கு­ப­வர்­க­ளுக்கும், சத்­தி­ர­சி­கிச்­சைக்­காக காத்­தி­ருக்கும் காலப்­ப­கு­தி­யிலும், பிர­ச­வத்தை தொடர்ந்து ஏற்­படும் தற்­கா­லிக கர்ப்­பப்பை இறக்­கத்­திற்கும், கர்ப்ப காலத்தில் ஏற்­படும் கர்ப்­பப்பை இறக்­கத்­திற்கும் பெரிது உத­வி­ய­ளிக்கும் சிகிச்சை முறை­யாக காணப்­ப­டு­கின்­றது.

மற்­றைய சிகிச்சை முறை­யாக சத்­தி­ர­சி­கிச்சை முறை உத­வி­ய­ளிக்கும். இதிலும் கர்ப்­பப்­பையை முற்­றாக அகற்­றாமல் செய்­யப்­படும் சத்­தி­ர­சி­கிச்சை, கர்ப்­பப்­பையை முற்­றாக அகற்றும் சத்­தி­ர­சி­கிச்­சை­யென இரு­வ­கைகள் உள்­ளன. இது ஒருவர் தனது குடும்­பத்தை முடித்துக் கொள்­வதா அல்­லது இல்­லையா என்­ப­தனைப் பொறுத்துத் தீர்­மா­னிக்­கப்­படும். இந்த சத்­தி­ர­சி­கிச்­சை­களில் சிறந்­தது கர்ப்­பப்­பையை அகற்றி கர்ப்பப்பை பகுதி தசை­களை மறு­சீ­ர­மைக்கும் சத்­தி­ர­சி­கிச்­சையே சிறந்­தது. இது ஒரு­வரை முழு­தாக மயக்­காமல் முதுகுப் பகு­தியில் ஊசி ஏற்றி உடம்பின் கீழ்ப்­ப­கு­தியை விறைக்கப் பண்­ணு­வதன் மூலம் இந்த சத்­திர சிகிச்­சையை மேற்­கொள்­ளலாம். இதன்­மூலம் மிகவும் வயது கூடிய பெண்­களில் கூட எந்­த­வித சிக்­க­லின்றி இந்த சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

நீரி­ழிவு நோய், உயர் குரு­தி­ய­முக்கம் போன்­றன உள்­ள­வர்­களில் இவ்­வா­றான சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ள முடி­யுமா?

ஆம்! மயக்க மருத்­து­வத்­து­றையில் ஏற்­பட்ட முன்­னேற்­றங்­க­ளினால் ஒரு­வரை முழு­தாக மயக்­காமல் உடம்பின் கீழ்ப்­ப­கு­தியை மட்டும் விறைப்பை ஏற்­ப­டுத்தி இந்த சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்ளக் கூடி­ய­தாக உள்­ளதால் இவர்­களில் எந்த சிக்­கலும் இன்றி தாம் மேற்­கொள்ள முடியும். மிகவும் வயது கூடிய 70 /80 வய­து­டைய பெண்­களில் கூட இவ்­வா­றான கர்ப்­பப்பை இறக்­கத்­திற்கு இந்தவகை சத்திரசிகிச்சை மேற்கொண்டு அவர்களது இறுதிக்காலத்தில் அவர்களுக்கு நிம்மதியான உடல் நலத்தைக் கொடுக்க முடியும். எனவே, கர்ப்பப்பை இறக்கம் பெண்களது வாழ்வில் சிலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை. இதற்குரிய சிகிச்சைகள் பெறுவதன் மூலம் அவர்கள் அசெளகரியங்களைப் போக்க முடியும். சத்திரசிகிச்சைகளை நினைத்து நாம் கற்பனையில் பயந்து ஒதுங்குவதன் மூலம் இறுதிக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களும் பல சிரமங்களை அனுபவிப்பதுடன் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் ஒரு பெரிய இடையூறாக இருக்க முடியும். எனவே தகுந்த நேரத்தில் தகுந்த தீர்வை பெறுவதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படப் போகும் கடினங்களைப் போக்க முடியும்.