ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் சஜித் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும் - மனோ

By Vishnu

05 Jan, 2020 | 06:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியல்  பழிவாங்கலை விடுத்து அரசாங்கம் ஜனாதிபதி  தேர்தல் காலத்தில்  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையக மக்களுக்கு ஒரு நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுப்பதாக  ஜனாதிபதி கோத்தபய ராஜக்ஷ குறிப்பிட்டதை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறந்து விட்டாரா எனவும் கேள்வி எழுப்பினார். 

அத்துடன் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் மேல் மாகாணத்தில் அதிகபடியான வாக்குகளில் வெற்றிப் பெறுவார்கள்.  நானும் கைது செய்யப்படுவேனா என்று எதிர்பார்த்துள்ளேன்.

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலின் பெற்றியை தொடர்ந்து  மக்களாணையுடன் அரசாங்கத்தை கைப்பற்றுவோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் சஜித் பிரேமதாச  தலைமையிலான அரசாங்கமே தோற்றம் பெறும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right