பொகவந்தலாவையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு :  இருவர் கைது

By R. Kalaichelvan

05 Jan, 2020 | 04:23 PM
image

பொகவந்தலாவ செப்பல்டன் தோட்ட பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

காசல் ரீ நீர்த்தேக்கத்திற்கு செல்லும் கெசல் கமுவ ஓயா பகுதியிலேயே குறித்த நபர்கள் இவ்வாறு சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு அகழ்விற்கு பயன்படுத்திய உபகரணங்கள் பொலிஸாரால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன். சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right