(எம்.மனோசித்ரா)

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க திணைக்களத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முற்பட்ட போது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

58 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 6.5 கிலோ தங்கத்தை (65 தங்க பிஸ்கட்டுக்கள்) சூட்சுமமான முறையில் உடலில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட போதே சுங்க திணைக்கள அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதானவர் 41 வயதுடையவர் என்றும், இவரிடம் மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.