காலி மாவட்டத்தில் புதிய தயாரிப்புகளை மேற்கொள்வதற்காக கிராமம் ஒன்றை அமைத்து புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று ராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ் வருடத்தில் புதிதாக 3,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதே இத் திட்டத்தின் இலக்காகும் என்றும் இராஜங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக புதிதாக ஹொட்டல்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)