ஓமந்தை கள்ளிகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமான மரங்களை கடத்திச்சென்ற கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஓமந்தை ஏ9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிசென்ற நிலையில் கள்ளிக்குளம் வளைவில் திரும்ப முற்பட்டபோது வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது.

வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.