”மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன குழப்பத்திற்கு தீவிரவாதி சஹ்ரானே காரணம்”: மௌலவி முபாறக்

Published By: J.G.Stephan

05 Jan, 2020 | 09:44 AM
image

மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌னம் காலதாமதம் ஆவதற்கு காரணகர்த்தா  தீவிரவாதி சஹ்ரானே என முஸ்லிம் உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றம் சாட்டியுள்ளார்..

க‌ல்வி அமைச்ச‌ர் ட‌ள‌ஸ் அழ‌க‌ப்பெருமவின் மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌  துரித முன்னெடுப்புக்க‌ளுக்காக‌ கிழ‌க்கு மாகாண‌ மௌல‌விமாரின் பாராட்டு நிகழ்வு முஸ்லிம் உல‌மா க‌ட்சியின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல்  சனிக்கிழமை(04.01.2020) இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துரைக்கையில், கிழ‌க்கு மாகாண‌ மௌல‌விமாரின் பாராட்டும் நிக‌ழ்வு ஒன்றை உல‌மா க‌ட்சியின் அங்க‌த்துவ‌ மௌல‌விமார்க‌ளால் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌மை மகிழ்ச்சிக்குரியது. இத‌ற்காக‌ முய‌ற்சியெடுக்கும் க‌ல்வி அமைச்ச‌ருக்கும் ஜ‌னாதிப‌தி கோத்தாபய ராஜபக்ஷ பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஆகியோருக்கும் உல‌மாக்க‌ளின் ப‌கிர‌ங்க‌ ஆத‌ர‌வை வ‌ழ‌ங்கும் கடமை எமக்கு ஒவ்வொருவருக்கும் உண்டு. கடந்த காலங்களில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் அரசியல் ரீதியாக நோக்கப்பட்டாலும் அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரானின் நடவடிக்கையின் காரணமாக தான் குறித்த நியமனங்கள் காலதாமதங்கள் ஆகியது.

எமது கட்சி தற்போதைய ஆட்சியின் பங்காளராக உள்ளது.மௌலவி ஆசிரியர் நியமனத்தை இந்த அரசாங்கம் வழங்க இருப்பதனால் இனவாத அரசாங்கமாக எவரும் பார்க்க முடியாது. அரசாங்கம்  என்பது எதிர்பார்ப்புக்களுடன் தான் இயங்குகின்றது. அதனை நாம் விளங்கி கொள்ள வேண்டும். புதிய ஜனாதிபதி, பிரதமர் , கல்வி அமைச்சரின் பூரண ஆதரவுடன் மீளவும் அந்நியமனத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மௌல‌வி அர்ஷாத் ம‌ற்றும் மௌல‌வி ந‌ளீம் ஆகியோர் நெறிப்படுத்தியதுடன்  மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌மான‌ பூர‌ண‌ விள‌க்க‌ங்க‌ங்கள் பிரதம அதிதியால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04