ஈரான் அமெரிக்கர்கள் மீதோ அல்லது அதன் சொத்துக்கள் மீதோ தாக்குதலை நடத்தினால் ஈரானின் 52 இலக்குகளை தாக்குவோம் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டுவிட்டரில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இலக்குகளை தாக்குவது குறித்து ஈரான் மிகவும் துணிச்சலாக கருத்து வெளியிடுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஈரானின் 52 இலக்குகளை இனம் கண்டுள்ளது, இந்த இலக்குகளில் சில ஈரானிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் மிகவும் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இலக்குகள் பொதுமக்கள் மீது தாக்குதல் இடம்பெற்றால் ஈரானின் அந்த 52 இலக்குகளையும் மிகவேகமாக தாக்குவோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இனிமேலும் அச்சுறுத்தப்படுவதை விரும்பவில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
52 இலக்குகள் என்பது 1979 இல் அமெரிக்க தூதரகத்தின் மீதான முற்றுகையின் பின்னர் கைதுசெய்யப்பட்டு ஈரானில் ஒரு வருட காலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த 52 அமெரிக்கர்களை குறிக்கின்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM