வில்லியம் கோபல்லாவ கேடயத்திற்கான றகர் போட்டியில் கண்டி வித்தியார்த்த கல்லூரி வெற்றி பெற்று கேடயத்தை சுவீகரித்துள்ளது.

கண்டி வித்தியார்த்த கல்லூரிக்கும் ஆனந்தா கல்லூரிக்கு மிடையே 48 ஆவது வருடமாக இடம் பெற்றுவரும் வில்லியம் கோபல்லாவ கேடயத்திற்கான போட்டியில் இம்முறை வித்தியார்த்த கல்லூரி வெற்றி பெற்றது.

போட்டியின்முதலாம் பாதி முடிவில் 10-5 என்ற புள்ளி அடிப்படையில் வித்தியார்த்த கல்லூரி முன்னிலை வகித்தது.

போட்டி முடிவில் 32-10 என்ற அடிப்படையில் புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றது.