சட்டவிரோத எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு சம்பவம் தொடர்பில் 57 நைஜீரிய பிரஜைகளும் 7 இலங்யைர்களுமேக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு அந்நாட்டு கடற்படையினரால் 7 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு , இவ்வாறு மேற்கொண்ட சட்டவிரோத எரிபொருள் மோசடி அதிகரித்திருந்தால் எரிபொருள் துறைக்கு மிக பெரிய அளவிலான பாதிப்பு மற்றும் நஷ்டம் ஏற்பட்டுருக்குமென நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.