வவுனியா வைத்தியசாலை விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் ஆடைத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கோடு இலவச ஆடை வங்கியொன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

பூந்தோட்டம் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.சு.கோணேஸ்வரலிங்கத்தினை ஸ்தாபகராக கொண்டு ஆரம்பிக்கப்படும் இலவச ஆடை வங்கி எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இவ்வங்கியில் புதிய ஆடைகள் மற்றும் தம்வசம் உள்ள பாவனைக்கு மேலதிகமான நல்ல நிலையில் உள்ள ஆடைகளையும் பொது மக்கள் வைப்பு செய்து நோயாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கு உதவ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.