நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றிலிருந்து புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

மேலும், ஓமான், ஈரான் மற்றும் மொரோக்கோ உள்ளிட்ட சில நாடுகள் இன்று முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை ஐக்கிய அரபு நாடுகள், சோமாலியா, கோமோரஸ் தீவுகள், எத்தியோப்பியா, இந்தோனேஷியா, மலேஷியா, துருக்கி, மாலைத் தீவு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.