வீதியை திறக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் -யாழ். மாவட்டச் செயலாளர்

Published By: Daya

04 Jan, 2020 | 02:29 PM
image

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வழங்கிய பணிப்புரைக்கு அமையக் கட்டுவன் – மயிலிட்டி வீதியை திறக்குமாறு  பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

“கட்டுவன் – மயிலிட்டி இடையேயான சுமார் 400 மீற்றர் (5 ஏக்கர்) வீதியைத் திறப்பதற்கு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையான மயிலிட்டி வடக்கு (ஜே246 கிராம அலுவலர் பிரிவு) பகுதி jிறக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் ஒரு பகுதி பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டித் துறைமுகத்துக்கான பிரதான வீதியாகக் காணப்படுகிறது.அதனால் பெரும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பிரதான வீதிக்குப் பதிலாகத் தனியார் காணி ஊடான மாற்றுப்பாதையால் மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கட்டுவன் சந்தி தொடக்கம் மயிலிட்டிச் சந்திவரையான வீதியை திறக்க  நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.” என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47