(செ.தேன்மொழி)

கட்டுநாயக்க விமானநிலையத்தில் 35 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய சட்டவிரோத சிகரட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று காலை 5.30 மணியளவில் சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்து.

அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்த யூ.எல்.208 என்ற விமானத்தில்  வந்த 28 மற்றும் 38 ஆகிய வயதுடைய இலங்கையர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 287 சிகரட்டு பெட்டிகளிலிருந்து 59 ஆயிரத்து 980 சிகட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரட்டுகள் 35 இலட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியானவை என்று தெரிவித்துள்ள சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.