ஆபிரிக்க நாடான சூடானில் இடம்பெற்ற விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சூடானின் டார்பர் பிராந்தியத்தின் மேற்கு டார்பர் மாகாணத்தில் ஆபிரிக்க பழங்ககுடிகள் மற்றும் அரபு பழங்குடியினருக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

இதில்  பலர் உயிரிழந்தனர் , பலர் படுகாயமடைந்தனர்.

அத்தோடு குறித்த இருதரப்பினருக்கிடையிலான மோதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டின்  பிரதமர் அப்துல்லா ஹம்தோக் மற்றும் இராணுவ தளபதி முகமது ஹமதான் தாகலோ மற்றும் உயர் அதிகாரிகள் அப்பகுதியின்  நிலைமையை கண்காணித்து வருவதோடு, சம்பவத்தில் காயம் அடைந்த மூன்று நீதிபதிகள் மற்றும் 4 சிறுவர்கள் உட்பட 11 பேர் வரை விமானத்தில் ஏற்றப்பட்டு சிகிச்கைளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் விமான ஊழியர்களும் விமானத்தில் இருந்துள்னர்.

இந்நிலையில் விமானம் புறப்பட்ட 5 நிமிடத்தில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விமானம் நொறுங்கியதில் 18 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.