சிறைக்குச் செல்­லவும் தயார் 

Published By: MD.Lucias

07 Jun, 2016 | 09:22 AM
image

பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்தால் கட்­டி­யெ­ழுப்பி விடலாம். ஆனால் சமஷ்டி என கூறி நாட்டை துண்­டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடி­யாது. தேசிய பாது­காப்பு, நாட்டின் இறை­யாண்மை மற்றும் இரா­ணு­வத்­தி­னரின் கௌரவம் இதுவே எனது கொள்கையாகும்.

இதனை அடிப்­ப­டை­யாக கொண்­ட­வர்­க­ளுடன் சேர்ந்து முதல்­வ­னா­கவும் அதற்­காக சிறைக்கு செல்­லவும் தயார் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

தேசிய நல்­லி­ணக்­கத்தில் ஒரு சத­வீ­தத்தை கூட நல்­லாட்சி அர­சாங்கம் பூர்த்தி செய்ய வில்லை. மாறாக நல்­லி­ணக்கம் என்ற போர்­வையில் இனங்­க­ளுக்கு இடையில் குரோ­தத்தை உரு­வாக்கும் சுய நல அர­சியல் செயற்­பா­டு­களே தற்­போது இடம்­பெ­று­கின்­றன. எனவே மீண்டும் நாட்டில் அமைதி­யின்மை ஏற்­ப­டு­வ­தற்கு முன்னர் மாற்­றத்தை உரு­வாக்க அனைத்து இன மக்­களும் ஒன்­றி­ணைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்த­பா­ய ராஜ­பக்ஷ மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜ­பக்ஷ நாட்டை பொறுப்­பேற்ற போது இதனை விட மோச­மான நிலையே காணப்­பட்­டது. போர் நிறுத்தம் என்ற போர்­வையில் இரா­ணுவ அதி­கா­ரிகள் ஒவ்­வொரு மாதமும் விடு­தலை புலி தலை­வர்­க­ளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மஹிந்த ஆட்­சியில் முத­லா­வது பாது­காப்பு சபை கூட்­டத்தில் அதனை நிறுத்தி இரா­ணு­வத்தின் சேவை எது என்­பதை கூறி அவர்­களை போருக்கு தயா­ராகும் படி கூறினோம். பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­பது அர­சியல் தலை­மைத்­து­வங்­களின் பொறுப்பு . இரா­ணு­வத்­திற்கு அந்த பணிகள் தேவை­யில்லை. முன்னாள் ஜனா­தி­ப­தி­­க­ளான ஜே.ஆர்.ஜய­வர்­தன , விஜே­துங்க , பிரே­ம­தாச மற்றும் சந்­தி­ரிக்கா ஆகி­யோரின் ஆட்சி காலத்­திலும் நாட்டில் போர் காணப்­பட்­டது.

ஆனால் சர்­வ­தே­சத்­திற்கு அடிப்­ப­ண­ி­யாது போரை முன்­னெ­டுத்­ததால் இரா­ணுவம் எம்­மீது நம்­பிக்கை வைத்து களத்தில் போரா­டி­யது. சிறந்த வகையில் போரை முன்­னெ­டுத்து நாட்­டிற்கு சுதந்­தி­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்தோம். 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரை­­யி­லான காலப்­ப­கு­தியில் தேசிய நல்­லி­ணக்­கத்­திற்­காக நாம் முன்­னெ­டுத்த பணி­களில் தற்­போ­தைய அர­சாங்கம் ஓரு சத வீதத்தை கூட செய்­யவில்லை. 

போர் முடிந்து இரண்­டரை வரு­டத்­திற்குள் மிதி வெடி­களை அகற்றி மக்­களை மீள் குடி­ய­மர்த்­தினோம். வீடுகள் அமைத்து கொடுத்தோம். முக்­கிய இரா­ணுவ முகாம்­களை தவிர ஏனைய அனைத்து முகாம்­க­ளையும் அகற்றி மக்­களின் காணி­களை மீள வழங்­கினோம். , நாம் ஆட்­சியை விட்டு ஒதுங்கும் போது நாட்டில் ஒரு சோதனை சாவடி கூட இல்லை. மிகவும் பாது­காப்­பான சூழலை ஏற்­ப­டுத்­தினோம்.

ஈ.பி.டீ.பி போன்­ற­வர்­க­ளுக்கு பாது­காப்­பிற்­காக வழங்­கிய ஆயு­தங்­களை மீள பெற்­றுக்­கொண்டோம். 13 ஆயிரம் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்தோம். இதில் ஒரு சத­வீ­தத்தை கூட தற்­போ­தைய அர­சாங்கம் செய்ய வில்லை . . ஆனால் நல்­லி­ணக்கம் என கூறிக்­கொண்டு இரா­ணு­வத்­திற்கு எதி­ராக அரசாங்கம் செயற்­ப­டு­கின்­றது. இதனால் 79 சத­வீ­த­மான சிங்­கள மக்கள் மத்­தியில் குரோத நிலையே உரு­வாகும். 

இவ்­வாறு ஒரு போதும் இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. இரு இனங்­க­ளுக்கு இடையில் மோதல்­களை உரு­வாக்கி குறு­கிய அர­சியல் நலன்­களை பெற்றக் கொள்­ளவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஆட்சி மாற்­றத்­திற்கு உத­வி­ய­தற்­காக சர்­வ­தேச நாடு­களின் தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்கு முயற்­சிக்க கூடாது. இத­னையே நாங்கள் கண்­டிக்­கின்றோம்.

போர்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசும் அமெ­ரிக்கா ஆப்­பா­னிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடு­களில் முன்­னெ­டுத்த இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை கருத்தில் கொள்ள வேண்டும். அது குறித்த பல நூல்­களை கடந்த நாட்­களில் நான் வாசித்தேன். வீடு­களில் யார் இருக்­கின்­றனர் என்று கூட பார்க்­காது குண்­டு­களை எறிந்து விட்டே வீட்­டிற்குள் செல்வர். இதனால் உயி­ரி­ழந்த பெண்­க­ளி­னதும் குழந்­தை­களின் எண்­ணிக்­கையும் பெருந்­தொ­கை­யாகும். இரா­ணுவ இழப்­பு­களை குறைப்­ப­தற்கு கடும் ஆயுத பாவ­னையே அமெ­ரிக்க இரா­ணு­வத்தின் போர் உத்­தி­யாகும். 

இவ்­வாறு நாங்கள் ஒரு போதும் வடக்கில் போரை முன்­னெ­டுக்க வில்லை. இரா­ணுவ வீரர்கள் மிகவும் பொறுப்­பு­ணர்­வுடன் செயற்­பட்டு மக்­களின் உயி­ரி­ழப்­பு­களை தடுத்­தனர்.

எனவே தற்­போ­தைய அர­சாங்­கத்தின் அடி­மைத்­தன போக்கை அனு­ம­திக்க முடி­யாது. உயி­ருடன் இருக்­கின்­ற­னரா ? இல்­லையா? என்று கூட தெரி­யாது பிரகீத் எக்­னெ­லி­ய­கொட காணா­மற்­போன சம்­பவம் தொடர்பில் இரா­ணுவ புல­ணாய்வு அதி­காரி சிறை வைக்­கப்­பட்­டுள்ளார். 

இதனை மாற்ற வேண்டும். பொது­பல சேனா எனது அமைப்பு என கூறி பிர­சாரம் செய்­யப்­பட்­ட­மை­யினால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் குறைந்­தன. 

ஆனால் அவர்­களும் இன்று உண்மையை உணர்ந்துக் கொண்டுள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் கட்டியெழுப்பி விடலாம். ஆனால் சமஷடி என கூறி நாட்டை துண்டாடி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே மக்கள் ஒன்றிணைய வேண்டும். நான் முதல்வனா ? இரண்டாமவனா ? என்பது தற்போதைய பிரச்சினையல்ல . தேவைப்பட்டால் முதல்வனாகவும் சிறைக்கு செல்லவும் தயார் என்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56