கம்போடிய நாட்டில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு , 23 பேர் வரையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

கட்டுமான பணியில் இருந்து கட்டிடமே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது. அதேவேளை இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக தெரிவித்த மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்கும் பணியை துரித படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டின் தலைநகரான புனோம் பென்னிலிருந்து தென்மேற்கில் 160 கிலோ மீற்றர் மற்றும் 100 மைல் தொலைவில் கடலோர கெப்பில் நகரிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு அங்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 28 பேர் வரை உயரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.