சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  திரைப்படங்கள் வெளியாகும் பண்டிகைகள் என்றால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு  கொண்டாட்டம் தான். 03 வயது முதல் 80 வயது வரை ரசிகர் இருப்பதும் இவருக்குதான். இவர் தனிப்பட்ட நடிப்பு திறமை தான் இன்னும் இவரை கதாநாயகனாக வலம்வரச்செய்துள்ளது. 

70 வயதிலும் இவரின் இந்த துடிப்பான நடிப்புக்கு என்ன காரணம் என அனைவரும்  சுப்பர் ஸ்டாரை பார்த்து வியப்பதுண்டு. ரசிகரின் இந்த கேள்விக்கு  ஐதராபாத்தில் நடந்த தெலுங்கில் தர்பார் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில்  ரஜினிகாந்த் சுவாரஸ்யமாக பதில் கூறியுள்ளார். 

இதன் போது உரையாற்றிய சுபஸ்டார் :-

‘‘தர்பார் படம் பெரிய வெற்றி பெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அதனால்தான் இந்த விழா இங்கு விமர்சையாக நடக்கிறது. இப்போது எனக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதிலும் எப்படி சுறுசுறுப்பாக உங்களால் இருக்க முடிகிறது? என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.

அதற்கு நான் சொல்லும் பதில் ஒன்றுதான். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக பேசுங்கள். இதுதான் எனது சுறுசுறுப்புக்கு காரணம். என தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய ரஜினிகாந், 

தமிழில் நான் நடித்து வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அந்த படங்கள் நன்றாக இருக்கிறது என்று நீங்கள் பார்த்தாலும், ரஜினி இருக்கிறார் என்பதற்காகவும் பார்க்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி.

படப்பிடிப்பு நடக்கும்போதே ஒரு மேஜிக் நடக்க வேண்டும். அது தர்பார் படத்தில் நடந்து விட்டது. 15 வருடமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். இப்போதுதான் அது நடந்து இருக்கிறது. இந்த படம் அதிரடி திரில்லர் படமாக தயாராகி உள்ளது.

என தமது ரசிகர்கள் பற்றியும் தர்பார் படம்பற்றியும் தெரிவித்துள்ளார்.