பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத  நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பூங்காவில் கத்தி குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரவித்துள்ளது.

அதேவேளை கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 பிரான்ஸ்  தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.