அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் இன்று திறக்க  அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். 

சலாவ இராணுவ முகாமில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து சீதாவக்க கல்வி வலயத்திலுள்ள 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் சாலாவத்த கனிஷ்ட்ட வித்தியாலயம், களுஅக்கல சித்தார்த்த கனிஷ்ட்ட வித்தியாலயம், புனித ஜோன் பொஸ்கோ கனிஷ்ட்ட வித்தியாலயம், அகரவிட்ட மகா வித்தியாலயம் ,கொஸ்கம மாகா வித்தியாலயம்  , கட்டுகொட கனிஷ்ட்ட வித்தியாலயம் மற்றும் கொஸ்கம சுமேத கனிஷ்ட்ட வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இவ்வாறு மூடப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான  அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.