நிர்மாணப் பணிக்காக மூடப்படும் புத்கமுவ பாலம்!

By Vishnu

03 Jan, 2020 | 05:36 PM
image

ஒருகொடவத்தை - அம்பத்தல வீதியின் வெல்லம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள புத்கமுவ பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதனால் குறித்த பாலத்தினூடான போக்குவரத்து நடவடிக்கை தடை செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரையான காலப் பகுதியிலேயே புத்கமுவ பாலத்தனூடான போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.

இதனால் இந்த காலகட்டத்தில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right