(ஆர்.யசி)

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் நேற்று ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.  

பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 20 மணித்தியாலங்கள்  உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். 

கர்ப்பணிப் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என பலர் தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ வசதிகளையும் உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளையும் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன கோரிக்கை தெரிவித்தார்.  

அவிசாவளை கொஸ்கமுவ, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட விபத்தை நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் வெடி பொருட்கள் விழுந்துள்ள  நிலையில் அவை வெடிப்புக்குள்ளாகியுள்ளதா ? அல்லது வெடிக்காத ஆயுதங்களால் என்பது மக்களுக்கு தெரியாதுள்ளது. 

ஆகவே உடனடியாக இராணுவத்தினரை பயன்படுத்தி குறித்த பகுதியிலுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அப்புறப்படுத்தும் வேலையினையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.