நியூசிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பெர்த்தில் நடந்த பகலிரவு டெஸ்டில் 296 ஓட்ட வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்டில் 247 ஓட்ட வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பேர்ன்ஸ் 18 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வோர்னர் 80 பந்துகளை சந்தித்து 45 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபோசனே அரை சதம் கடந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
வோர்னர் ஆட்டமிழந்த பின்பு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய முதல் ஓட்டங்களை எடுப்பதற்கு மிகவும் தடுமாறினார்.
ஸ்மித் 38 ஆவது பந்தை சந்தித்தபோதுதான் தன்னுடைய இன்னிங்ஸின் முதல் ஒட்டத்தை எடுத்தார். இத்தனை பந்துகளை சந்தித்து ஒரு ஓட்டங்களை எடுத்த ஸ்மித்தை மைதானத்தில் இருந்து ரசிகர்கள் கைதட்டி கேலி செய்தனர்.
ஐ.சி.சி.யும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் எல்லோரும் அமர்ந்து கை தட்டுவதுபோல காணொளியை வெளியிட்டு ஸ்மித்தை கேலி செய்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM