வாகன சாரதியொருவரிடம் லஞ்சம் கோரியதற்காக பொலிஸ் அதிகாரியொருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சார்ஜண்டாக பணியாற்றி வந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரை புத்தளம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

அண்மையில் கைதுசெய்யப்பட்ட லொறி சாரதியொருவரிடம் அவரது வாகனம் தொடர்பான ஆவணங்களை திருப்பி கையளிக்கும்போது 5000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.