2020 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான விமானம் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பெற்றுள்ளது.

AirlineRatings.com என்ற இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள 450 விமானங்களை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பான விமானமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு முறையும் 2019 ஆம் ஆண்டும் உலகின் பாதுகாப்பான விமானமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் AirlineRatings.com என்ற இணையத்தளத்தினால் தெளிவான வெற்றியளரை இணங்கான முடியாதமையினால் முதல் 20 இடங்களில் இருந்த விமான நிறுவனங்களுக்கு கூட்டாக விருது வழங்கப்பட்டது.

எனினும் இந்த ஆண்டு, குவாண்டாஸ் நிறுவனம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் என்பது அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். அத்துடன் உலகளவில் இரண்டாம் பழமையான விமானச் சேவையாகும். 

இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டு, 1935 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தனது விமானச் சேவையினை சர்வதேச அளவில் ஆரம்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.