சிரியாவில் நேற்று புத்தாண்டு தினத்தில் பாடசாலை ஒன்றின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப்பில் உள்ள பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உட்பட 4 பேர் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு குறித்த இத்தாக்குதலை அரசு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.