காட்டு யானை தாக்குதலில் வீரவெவ - திவுல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று அதிகாலை குறித்த நபர் பயரிட்ட நிலங்களை பார்வையிடுவதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து நபர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவரை தேடி சென்றபோது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்து கிடந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அத்தோடு சம்பவத்தில் உயிரிழந்த நபர் 38 வயதுடையவர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.