2020ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்று ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம், முதலாம் பாட வேளை முதல் மாணவர்களுக்கான வகுப்பறைக் கற்றல் -கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப் பதற்கான ஏற்பாடுகளை அதிபர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் என்பனவற்றின் 2020 ஆம் ஆண்டுக்கான தவணை விபரம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
2020 பாடசாலைத் தவணை அட்டவணை வருமாறு,
01 – சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகள்
முதலாந் தவணை – 2020 ஜனவரி -02 வியாழக்கிழமை முதல் 2020 ஏப்ரல் 06 திங்கட்கிழமை வரை (இரு தினங்களும் உட்பட)
இரண்டாந் தவணை – 2020 ஏப்ரல் 20 திங்கட்கிழமை முதல் 2020 ஜூலை 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை. (இரு தினங்களும் உட்பட)
மூன்றாம் தவணை – 2020 செப்டெம்பர் 02 ஆம் திகதி புதன்கிழமை முதல் 2020 நவம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை. (இரு தினங்களும் உட்பட)
02. முஸ்லிம் பாடசாலைகள்
முதலாந் தவணை – 2020 ஜனவரி -02 வியாழக்கிழமை முதல் 2020 ஏப்ரல் -09 வியாழக்கிழமைவரை (இரு தினங்களும் உட்பட)
இரண்டாம் தவணை – (முதலாம் கட்டம்) 2020 ஏப்ரல் 20 திங்கட்கிழமை முதல் 2020 ஏப்ரல் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை. (இரு தினங்களும் உட்பட)
றமழான் மாத நோன்புக்காக 2020.04.25 முதல் 2020.05.26 வரை விடுமுறை வழங்கப்படும்.
இரண்டாம் தவணை – (இரண்டாம் கட்டம்) 2020 மே 27 புதன்கிழமை முதல் 2020 ஆகஸ்ட் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை. (இரு தினங்களும் உட்பட)
மூன்றாம் தவணை – 2020 செப்டெம்பர் 02ஆம் திகதி புதன்கிழமை முதல் 2020 நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை. (இரு தினங்களும் உட்பட).
இதுகுறித்து சகல மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனாக்களின் பிரிவெனாதிபதித் தேரர்கள், சகல தனியார் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM