ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷவினால் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள, தேசிய தரவு மையத்தின் மூலம், வெளி­நாட்டு பய­ணங்­களை  மேற்­கொள்வோர், திரும்பி வரு­வோரைக் கண்­கா­ணிக்க முடியும் என்று  இரா­ஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

“வெளி­நாடு செல்­ப­வர்­களின் இரண்­டா­வது பயண இலக்கை இந்த அமைப்பு மூலம் கண்­கா­ணிக்க முடியும். சட்­டங்­களை மீறி தப்பி ஓடும் நபர்­களைக் கண்­கா­ணிக்­கவும் இது உதவும்.

எந்­த­வொரு குடி­ம­கனின் இறப்பும் மூன்று மாதங்­க­ளுக்குள் இந்த தரவு மையத்தில் பதி­யப்­பட வேண்டும்.

குடி­மக்­களின் குடும்ப விவ­ரங்கள் மற்றும் மருத்­துவ தக­வல்கள் உள்­ளிட்ட இர­க­சிய தர­வு­களைப் பாது­காக்க தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

தேவைப்­பட்டால் இது தொடர்­பாக எதிர்­கா­லத்தில் தரவு பாது­காப்பு சட்­டங்கள் இயற்­றப்­படும்.

தேசிய அடை­யாள அட்டை, சாரதி அனு­மதிப் பத்­திரம், குடி­வ­ரவு மற்றும் குடி­ய­கல்வு ஆவ­ணங்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு மற்றும் ஏனைய அனைத்து தனிப்­பட்ட தரவுகளும், தேசிய தரவு மையத்தின் கீழ் கொண்டு வரப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.